முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

‘சீரம் இந்தியா’ நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆயிரம் கோடி ரூபா இழப்பு

183

புனேவில் ‘சீரம் இந்தியா’ நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரசுக்கான, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்தை தயாரித்து, விநியோகிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில்,  நேற்று , ஏற்பட்ட தீ விபத்தில்,  5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து, தகவல் வெளியிட்டுள்ள,  சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா (Adar Poonawalla) , தடுப்பூசி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில், இந்த விபத்து ஏற்படவில்லை என்றும்,  தடுப்பூசி விநியோகம் இதனால் பாதிக்கப்படாது என்று கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் நாசவேலையாக இருக்குமா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படுவதாக மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *