தெற்கு பசிபிக் கடல் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கு கிழக்கே உள்ள நியூ கலிடோனியா தீவுக்கு அப்பால், ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7ஆக பதிவு ஆகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பிஜி, நியூசிலாந்து. வனூட்டு தீவு ஆகிய இடங்களில் ஒரு மீற்றருக்கும் மேற்பட்ட உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்குதல் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டு அதிகாரிகள் தென் பசிபிக் கடற்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
நியூ கலிடோனியா தீவு உள்ளிட்ட தென் பசிபிக் கடற்கரையோரம் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.