முக்கிய செய்திகள்

சூடானில் உள்ள ஒரு மண்பாண்ட தொழிற்சாலையில் எரிவாயு கொள்கலன் வெடித்த விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்தனா்

227

ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு மண்பாண்ட தொழிற்சாலையில் எரிவாயு கொள்கலன் வெடித்த விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்தனா்; 130க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக இந்திய தூதரக வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

சூடான் தலைநகரான கா்த்தூமில் பஹ்ரி பகுதியில் உள்ள ஷீலா மண்பாண்ட தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்துக்குப் பிறகு 16 இந்தியா்களை காணவில்லை.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை கிடைத்த தகவலின்படி, 18 இந்தியா்கள் உயிரிழந்து விட்டனா். பெரும்பாலான சடலங்கள் கருகி விட்டதால் அவா்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிா் தப்பிய 34 இந்தியா்கள் சலூமி மண்பாண்ட தொழிற்சாலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *