முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சூடானில் மக்களின் போராட்டங்களின்போது சூடான் ராணுவம் குறைந்தது நூறு பேரை கொன்றுவிட்டதாக ..

502

சூடானில் மக்களின் போராட்டங்களின்போது சூடான் ராணுவம் குறைந்தது நூறு பேரை கொன்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தவறானது என மறுத்த ஒரு சூடான் அதிகாரி, அதிகபட்சம் 46 பேர் போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர் என ஒப்புக்கொண்டார்.

புதன்கிழமையன்று ராணுவத்துக்கு எதிராக போராடியவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் குழு, சூடான் தலைநகர் கர்டூமில் குறைந்தது நூறு பேர் கொலை செய்யப்பட்டனர் எனக் கூறியது.

தலைநகரில் நைல் நதியில் இருந்து 40 சடலங்கள் கடந்த செவ்வாயன்று மீட்கப்பட்டன.

ஆரம்பத்தில் இவ்விவகாரம் குறித்து அதிகாரிகள் அமைதி காத்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 46 என சுகாதார துறை அமைச்சக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமையன்று கூறியுள்ளார்.

சூடானின் போராட்டக்காரர்கள் நாட்டின் ராணுவ கவுன்சிலோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துப்பட்ட நிலையில் ராணுவ கவுன்சிலோடு பேச்சுவார்த்தை என்பது நம்பக்கூடாத ஒன்று எனத் தெரிவித்திருக்கின்றனர்.

சூடான் தலைநகரில் அச்சத்துடன் வாழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வன்முறையை அடக்கவே நடவடிக்கை எடுத்ததாக ராணுவ கவுன்சிலின் துணைத் தலைவர் கூறியுள்ளார். மேலும் போராட்டக்காரர்களிடையே வன்முறை சக்திகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான போதை மருந்து விற்பவர்கள் கலந்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைக்கு காரணமென்ன?

சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலம் மூன்று ஆண்டுகள் என ராணுவம் அறிவித்தது.

ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன. ராணுவத்தின் தலைமையகம் முன்பு போராட்டக்காரர்கள் அமர்ந்தனர். மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் ராணுவ கவுன்சிலோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மூன்று வருடத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

ல் ஆயுதமற்ற போராட்டங்கள் மீது பாதுகாப்பு படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின.

ராணுவ கவுன்சிலின் தலைவர் ஜெனெரல் அப்டெல் ஃபத்தா அல்-புர்ஹான் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது மட்டுமின்றி ஒன்பது மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

இருப்பினும் புதன்கிழமையன்று எந்தவித நிர்ப்பந்தமுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என ஜெனெரல் புர்ஹான் அறிவித்தார். இதை போராட்டக்குழு நிராகரித்தது.

சூடான் மக்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என பஷீருக்கு எதிராக போராட்டங்களை தலைமையேற்று நடத்திய ஸ்பா எனும் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அம்ஜத் ஃபரீத் தெரிவித்தார்.

”இந்த இடைக்கால ஆட்சி நடத்தும் ராணுவ கவுன்சில் மக்களை கொல்கிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மக்கள் தயாராக இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

”நாங்கள் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுப்போம்” என புதனன்று ராணுவ கவுன்சிலின் துணைத்தலைவர் முஹம்மது ஹமதான் தெரிவித்தார்.

S

கர்டூமிலிருந்து வரும் பல்வேறுசெய்திகளும் அங்கே துணை ராணுவ படைகள் வீதிகளில் ரோந்து சென்று குடிமக்களை குறி வைத்துத் தாக்குவதாக கூறுகின்றன.

ஆர்.எஸ்.எஃப் எனும் இந்த துணை ராணுவப்படை ஏற்கனவே 2003-ல் மேற்கு சூடானில் டர்ஃபர் பிரச்சனையில் கொடூரமான அட்டூழியங்களை நிகழ்த்தியதற்காக அவப்பெயரை சம்பாதித்திருந்தது.

அங்கு வசிக்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சூடான் மருத்துவர்களின் மத்திய குழு ஒன்று நைல் நதியிலிருந்து வெள்ளிக்கிழமையன்று 40 சடலங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அக்குழுவின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், மருத்துவமனைகளில் நேரில் பார்த்து உறுதி செய்ததன் அடிப்படையில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது நூறு பேர் என்றனர்.

ஒரு முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தனக்கு தகவல் தெரிவித்திருப்பதாக சேனல்-4 ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் ட்விட்டரில் ஒரு குறிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பலர் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்; பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

”இது நிச்சயம் ஒரு படுகொலை” என ஒருவர் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *