முக்கிய செய்திகள்

சூறாவளி தாக்கவுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கனேடியர்களும் சிக்குண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கனேடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

632

அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களில் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான கனேடியர்கள் சிக்கியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதியில் இருந்து 440 பேரும், மன்ஹக்ட் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிராந்தியங்களில் 3,446 பேரும் தங்களை பதிவு செய்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறே ஐசாக் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதியில் இருந்து 149பேரும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவுகள் தாமாகவே முன்வந்து மேற்கொள்ளப்பட்டவை என்றும், குறித்த எண்ணிக்கையானது மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

அத்துடன் இந்த இயற்கைச் சீற்றத்தினுள் சிக்குறும் கனேயடிர்களுக்கு தூதரக உதவிகளை வழங்க தாம் தயாராக உள்ளதாகவும், எனினும் அமெரிக்காவின் கிழக்கு கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு்ம வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *