முக்கிய செய்திகள்

சென்னையில் கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

1455

சென்னை ராயப்பேட்டையில் உள்ள யுட்லேன்ட் ஹோட்டல் (woodland hotel) ஒரு கன்னட பார்ப்பனருக்கு சொந்தமான 3 நட்சத்திர விடுதி அது சற்று முன்னர் சிலரால் பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது.ஹோட்டலின் கண்ணாடிகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது..பின்னர் “கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் ,இதே போல கன்னட வணிக நிறுவனங்கள் சூறையாடப்படும்..இங்கேயும் கன்னடர்கள் வாழ்கிறார்கள்..ஜாக்கிரதை !” என்ற துண்டறிக்கைகளை வீசிச் சென்றனர்..

காவிரி நதிநீர் பிரச்சினையையொட்டி,கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்களும்,கடைகளும் தொடர்ச்சியாக கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு வருகிறது..

மேலும் நேற்று முன்தினம் ஒரு தமிழ் இளைஞர் தமிழர்களுக்கு ஆதரவாக முகநூலில் பதிவு செய்தார் என்ற காரணத்தால் அவரை கன்னட வெறியர்கள் சரமாரியாக தாக்கியும்,மண்டியிட்டு மன்னிப்பும் கேட்க வைத்த காணொளி பரவியது..இது தமிழர்களை கொந்தொழிப்பில் ஆழ்த்தியது..

ஆக அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இச்சம்பவம் நடந்திருக்கும் எனக் கருதப்படுகிறது..
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *