சென்னை கலவரம்: மாணவர்கள் மீது பொலிஸ் அராஜகம் – முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து, மோட்டார் சைக்கிள்களையும் தாக்கினர்!

1047

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினரே முச்சக்கர வண்டிக்கு தீ வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில விஷமிகள் புகுந்ததால் வன்முறை வெறியாட்டமாக மாறியது.

இன்று காலை முதலே சென்னையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீவைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மயிலாப்பூர் டி.வி. கோயில் தெருவில் உள்ள பொலீஸ் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் காவல்துறை பேருந்து, வான் ஆகியவற்றை தீயில் எரிந்து சாம்பலாகின.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர பொலீஸ் நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரக்காரர்கள் பொலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 32 பொலீசார் மற்றும் 2 துணை ஆணையர்கள் காயமடைந்தனர். இதனால் சென்னை மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சி அளி்ததன.

இந்நிலையில், மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு பொலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்கிறார் காவற்துறை ஆணையாளர்.

இதேவேளை அறவளியில் போராடிய மாணவர்கள் மீது காவற்துறையினர் கடுமையான அராஜகங்களை புரிந்து மாணவர்களை கொடூரமாக தாக்கும் காட்சிகளும், ஊடகங்களில் காணொளிகளாகவும் ஒளிப்படங்களாகவும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *