யாழ்ப்பாணம், நல்லூர் – செம்மணி வீதியில் உள்ள, இந்து மயானத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும், இன்று காலை குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பதற்றமான நிலை காணப்பட்டது.
ஆபத்தான வெடிபொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மயானத்தில் கிடப்பதாக சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், இன்று அதிகாலை குறித்த பகுதியை இராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து மயானத்தில் இருந்த பொதியை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு சிறப்பு அதிரடிப்படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது