முக்கிய செய்திகள்

செரீனா வில்லியம்ஸ் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறியுள்ளார்

971

அமெரிக்காவின் நட்டசத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நீண்ட இடைவெளியின் பின்னர் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் குழந்தையை பிரசவித்தின் பின்னர் முதல் தடவையாக டென்னிஸ் தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் செரீனா முன்னேறியுள்ளார்.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட உலக டென்னிஸ் தர வரிசையில் செரீனா வில்லியம்ஸ் பத்தாம் இடத்தைப் பெற்றுக் கொணடுள்ளார்.

ஜப்பானிய நட்சத்திர வீராங்கனை நயோமி ஒசாகா (Naomi Osaka) உலக டென்னிஸ் தரவரிசையில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் இதுவரையில் இருபத்து மூன்று கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *