வடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு சென்ற போது, அவர்களை இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என்ற நிபந்தனை வித்தித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.
இன்று மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்கு சென்றனர்.
அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழு காக்க வைக்கப்பட்டிருந்தது.
பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது , கற்பூரம் கொண்டு செல்ல முடியாது ,பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
மலையில் ஏறும்போது “ஓம் நமசிவாய ” என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர்.