முக்கிய செய்திகள்

ஜசான் (Jazan) நகரம் மீது ஏவுகணை தாக்குதல்

34

சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜசான் (Jazan) நகரம் மீது இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று சவுதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதலினால், ஜசான் (Jazan)  நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்திருக்கும், படங்களை சவுதி அரேபியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

எந்த வகையான ஏவுகணைகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்தி குழுவினர், சவுதி அரேபியா மீது நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *