முக்கிய செய்திகள்

ஜனநாயகத்திற்குரிய மதிப்பளித்து அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு இடமளிக்குக

113

அமெரிக்காவில் ஜனநாயகத்திற்குரிய மதிப்பளித்து அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக குணாம்சங்களை உடைத்தெறியும் வகையில் நடைபெற்ற அத்துமீறிய ஆர்ப்பாட்டங்களை  ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை  என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றம் மற்றும் செனட் சபைகளில் நடைபெறுகின்ற தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு நிகரானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறைகள் எப்போதுமே விரும்பத்தகாதவை என்றும் அவை ஒருபோதும் நியாயத்தினையும், நீதியையும் வழங்கப்போவதில்லை என்பதையும் கலகக்கரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கனடிய வெளிவிவகார அமைச்சர் பிரன்சுவா பிலிப் சம்பெயின், ( Francois-Philippe Champagne) ஆழ்ந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிப்பட்ட பின்னரும் அதிகார மாற்றத்திற்கு முன்னதாக இத்தகைய வெளிப்பாடு, அடிப்படை ஜனநாயகத்தினையே கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *