முக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பு செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

115

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பு செருப்பால் அடித்துக்கொள்ள  வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புரவி புயல் மாவீரர்நாள் காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார். அதேபோல ஆறு ஆயிரம் பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என எண்ணும் அளவுக்கு அவர் தமிழ் மக்களின் மனநிலை யே எமக்கு ஏற்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்ட அறிக்கை இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 80 ஆயிரம் மக்கள் காணமல் போயுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

சரத்பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் ஊடாக அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *