முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்

483

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  என்பதில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொண்ட அரசாங்கத்தின்  செயற்பாடுகளின் காரணமாகவே பொருளாதாரம்   வீழ்ச்சியடைந்துள்ளது. குண்டு தாக்குதலை தொடர்ந்து அரசாங்கததின் அனைத்து மோசடிகளும் முழுமையாக மறக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு  மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்களின் மோசடியே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பலவீனம். கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு காட்டும் அக்கறையினை நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள்  காட்டுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மாத்தறை நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *