முக்கிய செய்திகள்

ஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம்

176

ஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் புகுஷிமா (Fukushima) மாகாணத்தில் உள்ள, நமீ (Namie) நகரின் நகரில் இருந்து 90 கிலோ மீற்றர் தொலைவில், 36 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று இரவு 11.23 மணியளவில் இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்தினால், பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின என்றும், வர்த்தக நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உருண்டு விழுந்து சேதமடைந்ததாகவும், அலுவலகங்களில், அலமாரிகள் சரிந்து வீழ்ந்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

அதேவேளை, சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும், கடல் அலைகள் உயரமாக எழும்பும் என்றும் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *