பிரிட்டனில் பரவும், உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் மாறுபட்ட 3ம் வகை கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் இருந்து ரோக்கியோ வானூர்தி நிலையத்துக்கு வந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களுக்கு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும், எனினும், 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜப்பான் அறிவித்துள்ளது,