முக்கிய செய்திகள்

ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவு

34

ஜப்பானில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கடந்த 7ஆம் திகதிக்குப் பின்னர் ஜப்பானில் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற மறுத்தால் அவருக்கு 1 மில்லியன் யென் வரை அபராதமோ அல்லது 1 ஆண்டு சிறை தண்டனையோ விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுடனான தொடர்பாளர்களை கண்டறிவதில் இடையூறு ஏற்படுத்துவோருக்கு, 5 இலட்சம் யென் அபராதமோ அல்லது 6 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையோ விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *