முக்கிய செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் !

441

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் வழியாக பாய்ந்தோட காளைகள் காத்துகிடக்கின்றன. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது என்றே கூறலாம்.

காளைகளை களத்தில் சந்திக்க காளையர்கள் தயாராகி வரும் நிலையில், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான முன்பதிவு மற்றும் தேர்வு முகாம் இன்று நடைபெற்றது. அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 876 வீரர்கள் கலந்துகொண்டனர்.

அடையாள அட்டை, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சரி செய்யப்பட்டு உடல் பரிசோதனையில் உயரம், எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், உடலில் தீராத நோய் ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு சோதனை நடைப்பெற்றது. இச்சோதனையில் 848 பேர் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான அனுமதி சான்றினை பெற்றுள்ளனர்.

தற்பொது உடல் தகுதி சோதனை நடந்தாலும் போட்டியன்றும் இதேபோல் நடத்தப்படும் உடல்தகுதி சோதனையில் தேர்வு பெரும் வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான காளைகள் மற்றும் வீரர்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *