ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் பிரமாண்ட பேரணி

1048

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் பிரமாண்ட பேரணி ஒன்று இ;ன்று இடம்பெற்றுள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றதாகவும் இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *