இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் சுயபடம் எடுக்க முயன்றதால், ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் பயணம் மேற்கொண்ட 20 பேர் ஒரே இடத்தில் நின்று சுயபடம் எடுக்க முயன்றுள்ளனர்.
அனைவரும் ஒரேபக்கம் சென்றதால், படகு நிலைதடுமாறி கவிழ்ந்த்தில், ஏழு பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஜாவா காவல்துறை உயர் அதிகாரி அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.