ஜெயலலிதாவின் நினைவாலயம் திறப்பு

189

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் எம்.ஜி.ஆருக்குப்பின் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 1989 முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அதன் பின்னர் 1991இல் தமிழக முதல்வரானார்,

பின்னர் 2001, 2011, 2016 என மூன்று முறை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதா 2016 ஆம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே புதைக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2017ஆம் ஆண்டு முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, நினைவிடம் அமைக்க முதல் கட்டமாக 50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நினைவிடம் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.

ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிட நிர்மாணப் பணிகள் 80கோடி ரூபா செலவீட்டில் நிறைவு செய்யப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *