டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுக-கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம்

44

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுக-கூட்டணி கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

எனினும், தடையை மீறி திமுக, கூட்டணி கட்சியினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முத்தரசன், கனிமொழி, பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன் உள்ளிட்ட உள்ளிட்ட தலைவர்கள் பச்சை நிற முக்கவசம் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *