முக்கிய செய்திகள்

டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருக்கிறது ‘ரொரண்டோ கொரோனா தொற்று’ தொடர்பில் வைத்தியர்

245

டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ரொறன்ரோவில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமை குறித்து  மருத்துவர் மைக்கேல் வார்னர் (Michael Warner ) தெரிவித்துள்ளார்.

தமது மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பி விட்டதாக, Michael Garron மருத்துவமனையின் மருத்துவர் மைக்கேல் வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களின் மருத்துவமனையில் 17 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. ஆனால் 18 நோயாளிகள் அங்கே இருக்கின்றனர். அவர்களில் 14 பேர் கொரோனா  தொற்றாளர்கள்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

“மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், நான் 29 பேருக்கு மரணச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன்.

இவற்றில் நிறைய மரணங்கள் தடுக்கக் கூடியவை என்று நான் நினைக்கிறேன்,” என்றும் மருத்துவர் மைக்கேல் வார்னர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *