முக்கிய செய்திகள்

”டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்” -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்

375

றிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள பஞ்சாப் பல்கலைகழகத்தின் புவியியல் துறை துணைப் பேராசிரியர் அஷு கோஸ்லா உலகை படைத்த கடவுள் பிரம்மனுக்கு டைனோசர் பற்றி தெரியும் என்றும் மற்றவர்கள் யாரும் சொல்வதற்கு முன்னரே வேதத்திலேயே டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டைனோசர்கள் இருந்துள்ளன. ராஜசுரஸ் எனும் டைனோசர் இந்தியாவைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

” நமது வேதத்தில் இருந்து தான் அமெரிக்கர்களும், பிரிட்டிஷ்காரர்களும் டைனோசர் எனும் விஷயத்தை தெரிந்துகொண்டுள்ளார். 6.5 கோடி வருடத்துக்கு முன்னரே டைனோசர்கள் இருந்திருந்தாலும், கடவுள் பிரம்மனுக்கு உள்ள அளவற்ற ஆன்மீக சக்தி மூலம் டைனோசர்கள் பற்றி அறிந்திருந்தார்.

வேதத்தில் டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். டைனோசர் எனும் வார்த்தையே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. டைனோ என்றால் ‘கோரமான’ எனப் பொருள் சமஸ்கிருதத்தில் டாயன் என்றால் சூனியநிபுணர் மற்றும் சர் (SAUR) என்பது பல்லியை குறிக்கிறது. சமஸ்கிருதத்தில் அசுர் (ASUR) என்றால் அசுரன்.

ஆகவே பூமியில் இருந்த அனைத்து உயிரினங்களும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக்கூறுகிறார் அஷு கோஸ்லா.தன் குழுவுடன் இணைந்து குஜராத்தில் கெடா மாவட்டத்தில் இந்திய டைனோசரின் எச்சங்களை கண்டுபிடித்ததாக கூறும் கோஸ்லா, அதற்கு ராஜசுரஸ் என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டதாக விவரித்துள்ளார்.

”2001-ல் நர்மதா நதிக்கரையில் நாங்கள் அவற்றை கண்டுபிடித்தபிறகு சிங்கத்தை குறிப்பிடும் விதமாக ராஜா எனப் பெயரிட்டோம். அதாவது அசைவம் உண்ணும் டைனோசர் அது.

ராஜசுரஸ் வட அமெரிக்காவிலுள்ள டைரனோஸுரசூடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் ராஜசுரஸ் இந்தியாவைச் சேர்ந்தது என நாங்கள் நிரூபித்துள்ளோம்.

வேதம் 25-30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் டைனோசர் குறித்து பிரம்மன் அறிந்திருந்ததாகவும் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டைனோசர் படிமங்களை எடுக்க நான் களத்துக்குச் செல்லும்போது கூட பிரம்மனே எனக்கு உதவு என நான் பிரார்த்தனை செய்வேன். இதே போல ராமாயணத்தில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை தான் அடிப்படையாக கொண்டு ரைட் சகோதரர்கள் விமானம் தயாரித்துள்ளனர்” எனக் கூறியிருக்கிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *