முக்கிய செய்திகள்

டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரைவில் சந்திக்க உள்ளார்.

1168

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிட்டனர். இதனையடுத்து கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரைவில் சந்திக்க உள்ளார். லண்டன் நகரில் அரசு அலுவலகங்கள் உள்ள டவுனிங் ஸ்டீட் வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன.

வருகின்ற ஜனவரி 20-ம் தேதி டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் அவரை வெள்ளை மாளிகையில், பிரதமர் தெரசா மே சந்திக்கிறார்.

பிரதமர் தெரசா மேவின் தலைமை அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாத மத்தியில் டிரம்பின் உதவியாளர் குழுவினரை சந்தித்தனர். இதனையடுத்து டிரம்ப்-தெரசா மே சந்திப்பு உறுதியாகியுள்ளது. சந்திப்புக்கான தேதி உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகி உள்ள நிலையில் அமெரிக்கா உடனான பொருளாதார உறவை பிரிட்டன் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *