முக்கிய செய்திகள்

டொனெட்ஸ்க் (Donetsk) பகுதிக்கு ரஷ்யாவின் தடுப்பூசி

27

உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பகுதிக்கு ரஷ்யா தனது ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளது.

மேற்கத்தேய நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வாங்குவதற்கு உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டுள்ள அதேவேளை, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசியை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

எனினும்,  ரஷ்யாவுடனான அதன் எல்லையில் அமைந்துள்ள, கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள, டொனெட்ஸ்க் குடியரசிற்கு ரஷ்யா இரண்டாயிரம் தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்கியுள்ளது.

ரஷ்யாவின் இந்தச் செயலினால் உக்ரைன் ஆத்திரமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *