ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய முடியாது;மைக் பென்ஸ்

101

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய முடியாது என்று துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  சபாநாயகர் பெலோஸிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வது கொடூரமான முன் உதாரணமாகி விடும்.

அது நாட்டின் நலனுக்கு உரியதாக இருக்கும் என்றோ, அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்தன்மைக்கு சாதகமாக இருக்கும் என்றோ நான் நம்பவில்லை.

ஜனாதிபதி செயல்முடியாமல் போகும்போதும், திறமையற்றவராக இருக்கும்போது தான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது.

ட்ரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அவருக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்துவது, தேசத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் உகந்ததாக இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 222 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர் ஒருவரும் வாக்களித்துள்ளனர்.  205 வாக்குகள் தீர்மானத்துக்கு‌ எதிராக பதிவாகியுள்ளன.

18 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த நிலையில் செனட் சபையில் இதுகுறித்த விவாதம் நடந்து வருகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *