ட்ரம்ப் குற்ற பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி

41

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்ற பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

வாக்கெடுப்பில், 237 – 197 என்ற வாக்குகளின் எண்ணிக்கையில் ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். 4 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

குற்ற பிரேரணை மீதான வாக்கெடுப்பில் குடியரசு கட்சியின் 10 உறுப்பினர்கள் ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதிக்கு எதிராக இரண்டு தடவைகள் குற்ற பிரேரணை கொண்டுவரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ட்ரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

கெப்பிட்டல் ஹில் தாக்குதலை தூண்டியதாக தெரிவித்து ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக குற்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த குற்ற பிரேரணை செனட் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னர் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *