ட்ரம்ப் சட்டவாளர்கள் விலகினர்

37

கலவரத்தை தூண்டி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான வழக்கு செனட் சபையில் வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரது அணியிலிருந்து பல சட்டவாளர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டடம் டிரம்ப் ஆதரவாளர்களல் தாக்கப்பட்ட நிலையில், அவர்களை தூண்டிவிட்டதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது,

கலவரத்தை தூண்டியதாக அவர் மீது கொண்டு வரப்பட்டுள்ள  பதவி நீக்க தீர்மானம் மீதான விசாரணை வரும் 9ஆம் திகதி செனட் சபையில் தொடங்கவுள்ளது.

இந்தநிலையில் டிரம்ப் அணியிலிருந்து முக்கிய சட்டவாளர்கள் விலகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரை குற்றவாளியாக்கும் விசாரணைக்கு பதிலாக, அடிப்படை ஆதாரமற்ற தேர்தல் மோசடி வழக்கில் டிரம்ப் கவனம் செலுத்துமாறு கூறியதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *