சிறிலங்கா காவல்துறை தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
காவல்துறை தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன் மாபுல மற்றும் ‘கொஸ்கொட தாரக’ எனும் தாரக பெரேரா ஆகியோர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
காவல்துறை தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது காவல்துறையினரின் கடமை என்பதையும் சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்களின் மரணங்கள் நீதித்துறைக்குப் புறம்பான கொலைகளின் அடையாளங்களைக் கொண்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளதோடு, தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.