தடுப்பு மருந்துகளில் தாமதம்

33

இந்த வாரம் கிடைக்க வேண்டிய சுமார் ஆறு இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, MODERNA நிறுவனம், அறிவித்துள்ளதாக, கனடாவின் சமஷ்டி கொள்வனவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்தின் தர உத்தரவாத செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக, MODERNA நிறுவனம், கனேடிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எஞ்சிய மருந்துகளை அனுப்பும் பணியில் அடுத்த வியாழக்கிழமைக்கு பின்னர் தாமதம் ஏற்படாது என்று நிறுவனம் உறுதியளித்ததுள்ளதாகவும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இறுதி தர உத்தரவாத செயல்முறை முடிந்ததும், மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், இது ஒரு சிறிய சிக்கல் தான் என்றும் நிறுவனம் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அமைச்சர் அனிதா ஆனந்த் மேலும் கூறியுள்ளார்.

MODERNA நிறுவனத்திடம் இருந்து இந்த வாரம், 8 இலட்சத்து 46 ஆயிரம் தடுப்பு மருந்துகள் கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால், 2 இலட்சத்து 55 ஆயிரத்து, 600 மருந்துகளே புதன்கிழமை விநியோகிக்கப்பட்டதாகவும், அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *