பைசர் மற்றும் பயோ என் டெக் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் அடுத்தவார இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாக தேசிய விநியோக செயற்றிட்டத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கட்டத் தொகுதியில் நான்கு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் நான்கு வாரங்களில் 1.8மில்லியதன் தடுப்பூசிகள் பைசர் நிறுவனத்திடமிருந்தும் ஒரு இலட்சத்து 68ஆயிரம் தடுப்பூசிகள் மொடர்னா நிறுவனத்திடமிருந்தும் கனடாவை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.