முக்கிய செய்திகள்

தடுப்பூசி தொடர்பான தகவல்கள் தமிழில்

368

கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்காபரோ, றூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைப் பெறுவதற்கு முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியுடையவரா என்பதைக் கண்டறிந்து, முன்பதிவைச் செய்துகொள்ள www.Ontario.ca/covidvaccine எனும் இணையத்தளத்தினைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அல்லது 1-888- 999-6488 என்ற எண்ணுக்கு அழைத்து அதில் 300 இற்கும் மேற்பட்ட மொழிகளில் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த அழைப்பின் போது எண் 3 ஐ அழுத்தி “தமிழ்” என்று கூறுவன் மூலம் சில நிமிடங்களில் நீங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் இணைக்கப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, அனைவரையும் பாதுகாப்பான, கனடிய சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 மேலும் கொரோனா தடுப்பூசி பற்றி அறிந்து கொள்வதற்கு, நாளை மாலை 6 மணிக்கு, நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தலைவர் வைத்திய கலாநிதி அப்டெல் பெல்ஹஜுடன் (Abdel belhaj) ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்பு நடத்தும் மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *