முக்கிய செய்திகள்

தடுப்பூசி மருந்துகள் இன்று சிறிலங்காவில்

66

இந்திய அரசாங்கத்தினால் கொடையாக வழங்கப்பட்ட  தடுப்பூசி மருந்துகள் இன்று சிறிலங்காவைச் சென்றடைந்துள்ளன.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொவிஷீல்ட்  தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு, மும்பையில் இருந்து இந்தியன் எயர்லைன்ஸ் சிறப்பு வானுர்தி, இன்று முற்பகல் 11.35 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தியைச் சென்றடைந்தது.

42 பெட்டிகளில் பொதியிடப்பட்டிருந்த இந்த தடுப்பூசிகளைப் பொறுப்பேற்ற, இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அவற்றை, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, தாரக பாலசூரிய, சுதர்சனி பெர்னான்டோ புள்ளோ மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *