தடுப்பூசி விடயத்தில் தீவிர கண்காணிப்பில் கனடா

43

மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசியைப் பெறுவதால், தடுப்பூசிக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படும் எதிர்வினைகள் என்ன என்பதை கனடா கண்காணித்து வருகின்றது.

தடுப்பூசிகள் பற்றிய இணைய அறிக்கைகள் எத்தனை பேருக்கு எதிர்வினைகள், அவர்களின் வயது மற்றும் பாலினம், தடுப்பூசி வகை மற்றும் சரியான எதிர்வினைகள் பற்றிய தகவல்களுடன் புதுப்பிக்கப்படும்.

இதன்படி கடந்த ஜனவரி முதலாம் திகதி வரை, கனடாவில் ஒருஇலட்சத்து 15ஆயிரத்து  072 தடுப்பூசி மருந்து அளவுகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஒன்பது பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஐந்து தீவிரமாக இருந்தன நான்கு தீவிரமானவை அல்ல. ஆனால், தடுப்பூசியுடன் தொடர்புடையது என்று அர்த்தமல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *