முக்கிய செய்திகள்

தடைகளை உடைத்தெறிந்து பொலிகண்டி நோக்கிய பேரணி பொத்துவிலில் ஆரம்பம்

164

கொட்டும்மழை, விசேட அதிரிப்படையினரின் தடைகள், காவல்துறையினரின் கொரோனா விதிமுறைகளை மையப்படுத்திய எச்சரிக்கைகள் என்று அனைத்தையும் தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பமானது.

இதன்போது, விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இச்சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல்களை நடத்தவதற்கும் காவல்துறையினர் முயற்சித்திருந்தனர். இதனால் பதற்றமான நிலைமை அங்கு உருவாகியிருந்தது.

இணைந்து போராட்டத்தினைத் தடுக்க முற்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை அகற்ற முனைந்தபோது முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்த முற்பட்டதை தொடர்ந்து முறுகல் நிலையேற்பட்டது.

முன்னதாக பொத்துவில் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளால், ஏற்றம் பகுதியில் தடைகளை ஏற்படுத்திப் போராட்டத்திற்குச் சென்றவர்கள் வழி மறிக்கப்பட்டு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்வதற்குத் நீதிமன்றத்தின் ஊடாக தடைகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அதனையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் காவல்துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு தனிப்பட்ட விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இத்தனை தடைகளையும் கடந்து ஆரம்பமான போராட்டமானது, அக்கரைப்பற்று பகுதிக்குப் பேரணி சென்றதையடுத்து தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் முன்னெடுக்கப்பட்டு அக்கரைப்பற்று நகர் ஊடாக அட்டாளைசேனையை அடைந்திருந்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *