முக்கிய செய்திகள்

தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கப்படும்

27

புதிதாக பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, போலந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் தூதுவர்களை ரஷ்யா வெளியேற்றியதை அடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்ய தூதுவர்களையும் குறித்த நாடுகள் வெளியேற்றியுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (sergei lavrov), ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் தமது பொருளாதாரத்துக்கு அபாயங்களை உருவாக்கும் என்றும், இந்த தடைகளால் உறவுகளில் முறிவு ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *