முக்கிய செய்திகள்

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது!

317

தமிழீழ விடுதலை புலிகளால் இயக்கப்பட்ட கிளிநொச்சி “ஊடக இல்லம்” இயங்கிய கட்டிடத்தினை தமக்கு பெற்றுத் தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனிடம் விடுக்கப்பட்ட இக்கோரிக்கைiயினை நிராகரித்த அவர், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும் என்று தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய காணிகள் மற்றும் கட்டிடங்களை மீள கேட்க முடியாது. எனவே இலங்கை இராணுவத்தை சந்தித்து பேசுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறியுமாறும், அது குறித்து இராணுவத்திடம் சென்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்றும் கோரினார்.
இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம் இறுதி யுத்தம் காரணமாக பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாது சூழல் காணப்பட்டது.
பெரும்பாலான பொது மக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர். எனவே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்திருந்தோம். அத்தோடு அன்றைய சூழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலார்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதனை சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதில் அளித்த ஆளுனர், தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என்று தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *