தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக சமியா சுலுஹூ ஹசன்

38

தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக, துணை ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும், சமியா சுலுஹூ ஹசன் (Samia Suluhu Hassan) என்ற பெண் பதவி ஏற்கவுள்ளார்.

தன்சானிய ஜனாதிபதி ஜோன் முகுபுலி John Magufuli மருத்துவமனையில் மரணமானார் என்று துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹசன் (Samia Suluhu Hassan) புதன்கிழமை மாலை அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அரசியலமைப்பு நெருக்கடியை தீர்க்கவும், தற்போதைய வெற்றிடத்தை நிரப்பவும், அவரை நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஆபிரிக்காவில் தற்போது ஆட்சியில் உள்ள தலைவர்களில் முதல் பெண் தலைவராக சமியா சுலுஹூ ஹசன் (Samia Suluhu Hassan) விளங்குவார் என்று செய்திகள் கூறுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *