தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி இதய நோயினால் மரணம்

46

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி (John Magufuli)  இதய நோயினால் மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாருஸ் சலாமில் (Dar es Salaam) உள்ள மருத்துவமனையொன்றில் புதன்கிழமை ஜனாதிபதி ஜோன் மகுபுலி மரணமானார் என்று தொலைக்காட்சி மூலம் துணை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக பொதுவெளியின் தென்படாத நிலையில், தன்சானிய ஜனாதிபதிய்யின் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வந்தன.

சமூக ஊடகங்கள், நடைப்பயிற்சி, தொலைக்காட்சி போன்றவற்றில் தினமும் பொதுவெளியில் காணப்படும் அவர், இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்தார்.

இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியிருந்தனர்.

இந்த நிலையிலேயே அவரது மரணத்தை துணை ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மறைவையொட்டி தன்சானியாவில் 14 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *