தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகத்தில் இரண்டு கனேடியர்களை தாம் கைது செய்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது

377

தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு கனேடிய ஆண்களை தாங்கள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

கனேடிய வர்த்தகப் பிரமுகரான மைக்கல் ஸ்பாவோர்(Michael Spavor) மற்றும் முன்னாள் கனேடிய அரசதந்திரியான மைக்கல் கோவ்றிங் (Michael Kovrig) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதையும், இருவரும் வெவ்வேறாக விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சாளர் லூ காங் உறுதிப்படு்ததியுள்ளார்.

இவர்கள் இருவரது கைது தொடர்பிலும் கனடாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ள போதிலும், அவர்களுக்கு வழக்கறிஞர்களின் உதவி வழங்கப்பட்டுள்ளதா என்ற விபரங்களை வெளியிட அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சீனாவின் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவேயின் தலைமை நிதி அதிகாரி ஒருவர் வன்கூவரில் கடந்த முதலாம் நாள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கனடாவுக்கம் சீனாவுக்கும் இடையேயான பதற்ற நிலை அதிகரித்தமை குறிப்பிடத்த்ககது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *