முக்கிய செய்திகள்

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவு

20

தமிழகத்தில் இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் சராசரியாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகளும், சென்னையில் குறைந்தபட்சமாக 54% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

மேலும் புதுச்சேரியில், 81.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்களிப்பு,  இரவு, 7 மணிக்கு அமைதியாக நிறைவடைந்துள்ளது.

இதன்பின்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு வாக்குகளை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உயர் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும், மே 2 ஆம் திகதியே வாக்கு எண்ணிக்கை இடம்பெறவுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *