முக்கிய செய்திகள்

தமிழகத்தில் நிலவுகின்ற அடிமை ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

287

தமிழகத்தில் நிலவுகின்ற அடிமை ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், இல்லாவிடின் பாரிய பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் எனவும் திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும் ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழக அரசாங்கத்துக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழத்தினரால் கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவரான பிறகு தான் கலந்துகொள்ளும் முதல் போராட்டம் இது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது இந்தியாவில் ஊழல் நிறைந்த ஆட்சியே நிலவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அந்தவகையில் மத்திய மற்றும் மதவாத ஆட்சி மாநிலத்தில் நடைபெறுகின்ற ஊழல் ஆட்சிக்கு துணையாக இருக்கின்ற மோடி தலைமையிலான ஆட்சி ஒழிந்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று தமிழகத்திலுள்ள அடிமை ஆட்சி அழிந்தாக வேண்டும் என்றும், மேலும் தேர்தல் வரும் வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் ஆட்சி நிலவும் என்று எதிர்பார்க்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *