முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்

242

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளில் உள் அரங்குகளில் 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைபெற்று நிறைவடைந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமையே கொரோனா பரவல் ஆபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *