முக்கிய செய்திகள்

தமிழகத்தில் மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

519

மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சேலம் பகுதியில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை அவர் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று பிணையில் வெளியில் வந்துள்ள அவருக்கு சிறை வாயிலி்ல் அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்துள்ள நிலையில், அவர்களுடன் சேர்ந்து எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி முழக்கங்கள் எழுப்பினார்.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ள வளர்மதி, தன்னைப் போன்றவர்களை கைது செய்ததற்கு காரணம் இனி மக்களுக்காகப் போராடக்கூடாது என்பதே என்று விபரித்துள்ளார்.

விவசாயத்தை அழித்து மக்களின் எதிர்ப்பை மீறி தமிழக முதல்வர் இந்த திட்டத்தை நிறைவேற்றப் பார்ப்பதாகவும் சிறையில் இருந்து இன்று வெளியான மாணவி வளர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *