சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதற்கு, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
பா.ஜ.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டிருந்த போதும், அவரை சேர்த்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனித்துப் போட்டியிட தினகரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அ.ம.மு.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர்.
தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ள தினகரன், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று காலை அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
வரும் 10ஆம் திகதி 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது