தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.
“தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து, கொரோனா தடுப்பூசி போட தலைமை செயலரை அறிவுறுத்தி உள்ளோம்.
பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும், 16ம் நாள் வருமான வரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஐந்து மாநிலத் தேர்தலில் செய்ய வேண்டிய முடிவுகள் எடுக்கப்படும்.
‘வட கிழக்கு மாநிலங்களில், 200 வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் கூட உள்ளன. அங்கு பாரபட்சமின்றி, நேர்மையாக தேர்தலை நடத்தியுள்ளோம்.,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.