தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும் நாளை திட்டமிட்டபடி தேர்தல்

11

தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் நாளை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நேற்றுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஒய்ந்த நிலையில், நாளை காலை, 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி, இரவு, 7 மணிக்கு முடிவடையும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தொகுதிகளில் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதனால், கொளத்தூர், திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், உள்ளிட்ட 7 தொகுதிகளில்  தேர்தல் இடைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் பரவியிருந்தது.

எனினும், அந்த தகவலில் உண்மையில்லை எனவும் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *