முக்கிய செய்திகள்

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு;துணை சபாநாயகராக பிச்சாண்டி

252

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும், நாளை பதவி ஏற்க உள்ளனர்.

தமிழக சட்டசபையின் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று பகல், 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.

இன்று காலை சபாநாயகர் பதவிக்கு,  அப்பாவுவும், துணை சபாநாயகர் பதவிக்கு, பிச்சாண்டியும்  மனு தாக்கல் செய்தனர்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு, வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில்,  இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

சட்டசபை நாளை காலை, 10:00 மணிக்கு கூடும் போது, சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை, தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அறிவிப்பார்.

அதைத் தொடர்ந்து, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர்.

பின்னர், துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அறிவிப்பார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *