தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 11பேரைச் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்குத் தொடர்பில் பன்னீர்ச் செல்வத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது

538

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 11பேரைச் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்குத் தொடர்பில் துணை முதல்வர் பன்னீர்ச் செல்வம் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பன்னீர்ச் செல்வம் பிரிந்து சென்று தனியான அணியாக செயற்பட்ட வேளை,எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட போது நடாத்தப்பட்ட வாக்கெடு்பபில் பன்னீர்ச் செல்வத்தின் அணியைச் சேர்ந்த 11 பேர் எடபாடி பழனிச் சாமிக்கு ஆதரவளிக்காது எதிர்த்து வாக்களித்தனர்.

அப்போது திராவிட மன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தினகரன் அணியினர் சார்பிலும் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அது நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று பன்னீர்ச் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவரின் இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், நாளை விசாரணை தொடங்கி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *